Breaking News
recent

யாழ். நல்லூர் உற்சவகால கடைகள் முன்பு வருடம் தோரும் சிறுவர்கள் துஸ்பிரயோகம் – அதிகாரிகள் அசமந்தம்.


(-தங்கராசா ஷாமிலன்.)
நல்லூர் உற்சவகால கடைகள் முன்பாக சிறுவர்கள்  மற்றும் பெற்றோர்கள் பச்சிளம் குழந்தைகளோடு  ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு விற்பனையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் மிகுந்தலையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிந்த சிறுவர்கள் துஸ்பிரயோகம் பற்றி மேலும் தெரியவருவது…
விற்பனையில் ஈடுபடும் அனைத்து சிறுவர்களும் தமது பெற்றோர் அல்லது உறவினர்களுடனே உற்சவகால கடைகள் முன்பு காணப்படுகின்றார்கள். பெற்றோர் சிறுவர்களிடம் ஊதுபத்தியை கொடுத்து விற்பனை செய்து வருமாறு அனுப்புகின்றார்கள். கடைகள் அமைந்திருக்கும் வளாகத்தில் நிற்கும் பக்தர்கள் சிறுவர்களின் பச்சிளம் முகத்தைப்பார்த்து ஊதுபத்தியை வாங்கி செல்கின்றனர்.
இங்கு துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படும் சிறுவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடிய போது
தாம் வெளிமாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும் யாழ் நகரிலுள்ள ஐந்து சந்தியில் லோட்ஜ் ஒன்றில் பல குழுக்களாக தங்கியிருப்பதாகவும் தமது குடும்பத்தின் வறுமை காரணமாக தமது உறவினர்களுடன் இங்கு வந்து நின்று விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்.
சிறுவர் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளே உங்களின் கவனத்திற்கு...
இச்சிறுவர்களின் குடும்ப பொருளாதாரம் பலவீனமாக காணப்பட்டால் அல்லது கண்டறியப்பட்டால் அவர்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள் என ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து  சுட்டிகாட்டிவருகின்றோம்.



Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.