Breaking News
recent

யாழில் வாள்வெட்டு குழு ஆயுதங்கள் மீட்பு பொலிஸ் அதிரடி வேட்டை.


யாழ் செய்திகள்:யாழில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டவிரோத கும்பல் தொடர்பில் யாழ் சுண்ணாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் நிமித்தம்  நேற்று காலை சுண்ணாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இருபது மற்றும் பத்தொன்பது வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோண்டாவில் மற்றும் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த இவர்களிடமிருந்து 5மில்லி கிராம் கெரோயின் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களிடம் தீவிர விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்ணடனர்.

இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலிற்கமைவாக யாழ் கொக்குவிலிலுள்ள இந்து ஆலயம் ஒன்றின் கோபுரத்திற்குள் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கூரிய ஆயதங்களையும் சுண்ணாகம் பொலிசார் மீட்டனர்.

ஆறு கைக் கோடரிகள் மற்றும் மூன்று பாரிய வாள்கள் அத்துடன் மர்ம நபரைப்போல அடையாளம் தெரியாத முறையிலான இரண்டு ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வடமாகாணத்தில் சில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வடமாகாணம் முழுவதும் வாள் வெட்டு வன்முறைகள் இடம்பெறுவதாக கூற முடியாது என வடக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 30 மாணவர்களுக்கு சீருடை துணி வழங்கி வைக்கும் நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சில பிரதேசத்தில் தான் வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவே வடக்கு மாகாணம் முழுவதும் இவ்வாறு இடம்பெறுவதாக கூறமுடியாது. நாம் வாள்வெட்டு சம்பவங்கள் களவு இவற்றை தடுக்கும் முகமாக கிராமங்கள் தோறும் விழிப்பு குழுக்குகளை அமைத்து செயற்படுத்தி வருகின்றோம்.

அந்த விழிப்பு குழுக்கள் இரவு நேரத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் இதனால் விழிப்புக்குழுக்கள் செயற்பட தொடங்கிய பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

உங்கள் பிரதேசங்களில் சந்தேகதகதுக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் பொலிசாருக்கு அறிவியுங்கள் அவ்வாறு அறிவிப்பதன் மூலம் சட்டவிரோத சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகழிவில் மேற்கண்டவாறு உரையாற்றிக் கொண்டிருக்கும் அதேவேளையிலேயே சுன்னாகம் பகுதியில் இருவர் வாள்களுடன் கைதாகினர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.