Breaking News
recent

மக்களே!! வாளால் வெட்ட வந்தால் அடித்து கொல்லுங்கள்! தமிழ் பொலிஸ் அதிகாரி ஆக்ரோசம்!

ஒருவர் எங்களை வாள்வெட்ட வருவாராயின் அவரை நாங்கள் கொலை செய்வதற்குச் சட்டத்தில் இடமிருக்கின்றது என வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.குப்பிளான் மக்களுக்கும், பொலிஸாருக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

 அண்மைக் காலமாக குப்பிளான் பகுதியில் அதிகரித்துள்ள திருட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடித் தீர்வு காணும் வகையில் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் தற்காப்பு உரிமையிருக்கின்றது. தயவு செய்து சட்டத்தைத் தெரிந்து வையுங்கள். வாள்வெட்டு நடாத்த குழுவாக வருபவர்களை 10 அல்லது 20 பேர் இணைந்து கட்டிப் பிடித்துக் கொலை செய்யுங்கள். அப்போது தான் எங்கள் கிராமம் திருந்தும். நாங்கள் பிறந்த அன்றே எங்களுக்கு இறப்பும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அந்த இறப்பிற்காக நாங்கள் அச்சப்பட்டு வாழ்வோமானால் எந்தநாளும் நாங்கள் இறந்து வாழ்வதற்கான நிலைமையே உருவாகும்.ஆகவே, இறப்பைப் பற்றி நீங்கள் சிந்திக்காதீர்கள் என வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் மேலும் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.