Breaking News
recent

விக்னேஸ்வரன் புதிய கட்சியினை அமைத்தால் கூட்டமைப்பினை பாதிக்காது-- சிறீகாந்தா தெரிவிப்பு


-க.ஹம்சனன்-

யாழ்ப்பாணத்தில் உள்ள யு.எஸ் விருந்தினர் விடுதியில் நேற்று  ரெலோ அமைப்பினைச் சேர்ந்த சிறிகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் வடக்கு மாகாணத்தில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பெரும்தொகையான வாக்குகளை பெற்ற முதன்மை கட்சியாகும். இந்த நிலையில் எந்த நேரத்திலும் நாங்கள் தேர்தலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. மக்கள் பிரச்சினைகளும் உள்ளது. அது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கால கட்சி ரெலோ கட்சி. அந்த வகையில் அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும்.

வடமாகாண சபை முதலமைச்சராகவுள்ள க.வி.விக்னேஸ்வரன் விரும்பினால் புதிய கட்சி அமைக்க முடியும். அது தொடர்பில் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை. அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.

தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுவார். முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ரெலோவின் ஆதிக்கம் இருக்கும் என்றார்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.