Breaking News
recent

வாள்வெட்டுக்குழுவினரை கட்டுபடுத்தும் முயற்சியில் மானிப்பாய் பொலிஸார் அசமந்தம் - பொதுமக்கள் விசனம்.

ஆவா மற்றும் தனுரொக் வாள்வெட்டுக்குழுவினர் அதிகளவில் உள்ள பிரதேசமாக மானிப்பாய் காணப்படுகிறது.

வன்முறைச் சம்பவங்கள் எம் பிரதேசத்திலேயே அதிகளவில் இடம் பெற்றுவருகின்றது ஆனால் வாள்வெட்டுக்குழுவினரை கட்டுபடுத்தும் முயற்சியில் மானிப்பாய் பொலிஸாரின் அசமந்த போக்கு காணப்படுவதாகவும் குற்றச்செயல் புரிவோரிடம் பணத்தைப்பெற்று குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

எம்பிரதேசம் மட்டுமில்லாது வன்முறை இடம்பெறுகின்ற அனைத்து இடங்களிலும் சட்டஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்னல் செய்தியாளர் - தமிழன்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.