Breaking News
recent

கேரளாவிற்கு நிவாரணத்துடன் சென்ற புலி ஆதரவாளர்களின் வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு சென்ற நிவாரணப்பொருட்களை தாங்கிய வாகனம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் கொடியை ஒத்த கொடி காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த வாகனத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழல்படமும் பொறிக்கப்பட்டிருந்ததாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் குறித்த வாகனத்தில் நிவாரணப்பொருட்களை கொண்டு வந்தவர்கள், சீமான் தலைமையிலான தமிழகத்தின் நாம் தமிழர் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளது

எனினும் சுமார் 25 வாகனங்களில் சென்ற நாம் தமிழர் இயக்கத்தினர் ஏற்கனவே பல பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பொருட்களை விநியோகித்துமுடித்துவிட்டனர்

இதனையடுத்து அந்த பொருட்களின் சில மாதிரிகளை காவல்துறையினர் வெடிகுண்டுகள் மற்றும் மோப்பநாய் பரிசோதனைகளுக்காக அனுப்பியுள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.