Breaking News
recent

சிவாஜிலிங்கம் எனக்கு தீங்கு ஏற்படுத்தமாட்டார் - யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு.



(- எஸ்.நிரூஜன்.)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் நேற்று (22) மயிலிட்டி துறைமுகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சிவாஜிலிங்கம் பங்கேற்றிருந்தமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சிவாஜிலிங்கம் பங்கேற்றிருந்தமைக்கு ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிடும் போது..

அண்மைக்காலத்தில் நான் யாழ்ப்பாணம் வரும்போது உங்களுடைய சிவாஜிலிங்கம் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார். எனக்கு நிச்சயமாக ஒரு நம்பிக்கையிருந்தது சிவாஜிலிங்கம் அவர்கள் எனக்கு ஒரு தீங்கும் ஏற்பட விடமாட்டார் என்ற நம்பிக்கையிருந்தது. எனவே நான் போகும் நேரத்தில் வாகனத்திலிருந்து இறங்கி அவரிடம் போய் கேட்டேன் என்ன இந்த போராட்டத்தின் நோக்கம் என கேட்டேன். அவர் அப்போது இவ்வாறு செய்ய வேண்டாம் என எனது பல நண்பர்கள் முதலே தொலைபேசி மூலம் சொன்னார்கள் என்றார்.

ஆனால் எனக்கு தெரியும் சிவாஜிலிங்கம் அவர்கள் கூட உங்கள் பகுதி மக்களுடைய சாதாரண நியாயமான பிரச்சினைகளுக்காகதான் அவர் பேசுகின்றார் என தெரிந்திருந்தது. என்றார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.