Breaking News
recent

ஜனாதிபதி தலைமையில் மேல் மாகாண சபையின் புதிய கட்டிடத் தொகுதியை திறப்பு


பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் புதிய கட்டிடத் தொகுதி  ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேனவின் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

மகா சங்கத்தினரின் பிரித் பராயனத்திற்கு மத்தியில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அக்கட்டிடத்தின் 13ஆவது மாடியில் இடம்பெற்ற புதிய சபை அமர்வுக்கு தலைமை வகித்து அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

மேல் மாகாண சபையின் அனைத்து அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களை ஒரே கட்டிடத்தின் கீழ் கொண்டுவந்து விரிவாகவும் வினைத்திறன்மிக்க வகையிலும் மக்கள் சேவையை வழங்கும் நோக்குடன் அனைத்து வசதிகளையும் கொண்டதாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இப்புதிய கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.