Breaking News
recent

மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 11 மணித்தியாலங்களில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மூவாயிரத்து 325 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 8 மணி வரை நாடாளாவிய ரீதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.