Breaking News
recent

காணமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் - அடுத்த சந்திப்பு யாழ் மற்றும் கிளிநொச்சியில்

காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த சந்திப்பு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பில் காணமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலம் குறிப்பிட்டுள்ளதாவது,

காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் தனது அடுத்த மாவட்ட ரீதியிலான பொதுமக்களுடனான சந்திப்பை ஜூலை 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் ஜூலை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியிலும் நடத்த திட்டமிட்டுள்ளது. இச்சந்திப்பின்போது ஆணைக்குழுவிலுள்ள 7 ஆணையாளர்களும் பிரசன்னமாகவுள்ளதோடு காணாமற்போனோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள், ஊடகவியளாளர்கள் என்போரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவர். காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் திட்டமிடல் மற்றும் வரையறைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவர். இதன்போது காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பிலான திட்டமிடல் மற்றும் வரையறைகள் தொடர்பில் பொதுமக்கள் நேரடியாக கேள்வியெழுப்பலாம்.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கடந்த மே மாதம் முதல் மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பை ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிராந்திய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பு தொடர்பான விபரம்:

மாவட்டம் -யாழ்ப்பாணம்
திகதி -2018 ஜூலை 14
இடம் -வீரசிங்கம் மண்டபம்
மு.ப 09.00 - மு.ப 10.30 மணி -நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை, காரைநகர், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள காணாமற்போனோரின் உறவுகளுடனான கலந்துரையாடல்
மு.ப 10.45 - பி.ப 12.15 மணி -கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள காணாமற்போனோரின் உறவுகளுடனான கலந்துரையாடல்
பி.ப 12.15 - பி.ப 12.45 மணி - ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு
பி.ப 12.45 - பி.ப 1.45 மணி - சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு

மாவட்டம் -கிளிநொச்சி

திகதி -2018 ஜூலை 15
இடம் -கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்டபம்
மு.ப 09.30 - மு.ப 11.30 மணி - காணாமற்போனோரின் உறவுகளுடனான கலந்துரையாடல்
மு.ப 11.45 - பி.ப 12.45 மணி - சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு
பி.ப 1.00 - பி.ப 1.30 மணி - ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு

தவிசாளர்
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்
34, நாரஹேன்பிட்டி வீதி
நாவல
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.