Breaking News
recent

வடக்கு மாகாண பனை எழுச்சி வாரம் தாயக மக்கள் மத்தியில் வரவேற்பு...


( - தங்கராசா ஷாமிலன் )

வடக்கு மாகாண பனை எழுச்சி வாரம் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வும் நல்லூர் சங்கிலியன் கிட்டு  பூங்கா வளாகத்தில் ( 22-07-2018)   நேற்று  முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை  காலை 9.30 மணிக்கு   மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் நூலினை வெளியீட்டு வைக்க மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் முதலாவது பிரதியை பெற்றுக்கொள்ள   எழுச்சியாக  ஆரம்பமானது.



குறித்த கண்காட்சியில்  யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார்,  வவுனியா ஆகிய   வட  மாகாணத்திலுள்ள  பனை சார் கூட்டறவுச் சங்கங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து  19 பனை சார் கூட்டறவுச் சங்கங்கள் பங்கு  பற்றியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

பனை எழுச்சி வாரம் கண்காட்சியில் பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள்  கருத்து தெரிவிக்கையில்.

தமிழர் தாயகத்தில் அருகிவருகின்ற பனை வள உற்பத்திகளை ஊக்குவித்தல் சந்தைப்படுத்தலும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள பிளாஸ்ரிக் பாவனையை குறைக்க மக்கள் மத்தியில் விளிப்புனர்வை ஏற்படுத்தவும் தீவக மக்கள் பனைவளத்தை வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுவதனால் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இவ்கண்காட்சி ஏதுவாக அமைந்துள்ளது.  நவீன மயப்படுத்தப்பட்டுள்ள உணவுபழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பனங்கட்டி , ஒடியல், புழுக்கொடியல் மா, ஒடியல் மா , கருப்பனி பொருட்கள் மக்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு பனை சார்ந்த உற்பத்திகள் சக்தி மிகுந்ததாகவும் காணப்படுகிறது இதனுடாக  நோயற்ற வாழ்வை ஏற்படுத்த முடியும்.  

பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிராக பனைவளங்களை நல்லமுறையில் பயன்படுத்தினால் சிறப்பாக அமையும் அத்தோடு  புலம் பேர்ந்து  நாடுகளில் இருக்கின்ற எமது உறவுகள்  இக்காலப்பகுதியில் எமது தமிழர்  தாயகத்திற்கு வருகை தருகின்றார்கள் எமது பனை எழுச்சி வாரம்  கண்காட்சியை ஆர்வத்தோடு பார்வையிடுவதோடும் பனை வளங்களை  விரும்பி வாங்கி செல்வதையும்  காணமுடிகின்றது . இங்கு இருப்பவர்களை விட   புலம்பேர் நாடுகளில் இருப்பவர்கள்  எமது தாயகத்திற்கு வந்து பனை சார் உணவுவகைகளை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள்  தாயகத்திலிருந்து கடல் உணவுகளை விட  பனை சார் உற்பத்திகளை தான் ஏற்றுமதி  செய்கின்றார்கள். ஆகவே பனை வளங்கல் வளர வேண்டும்  என்னும் நோக்கத்திற்காகவே  இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

இங்கு உள்ள குறைபாட்டையும் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.  பனைவளத்தை நம்பும் பனம் தொழிலாளர்கள் அருகிவருகின்றார்கள் . கிட்டத்தட்ட 22000 தொழிலாளர்கள்  இருந்த இடத்தில் தற்போது 6000  க்கு உட் பட்ட தொழிலாளர்கள் தான் தொழில் புரிகின்றார்கள். எதிர்காலத்தில் பனைவள தொழிலாளர்கள்  பனைவள வல்லுனர்கள்  ஈடுபாடு இல்லாமல் விட்டால்  இதன் எதிர்காலம் கேள்வி குறியாக அமைந்து விடும்  ஆகவே இதனை நவீனமயப்படுத்தி  பனைவளத்திற்கு அதனுடைய கௌரவம் மரியாதை மதிப்பு  வழங்கும் பட்சத்தில்  பனைவளத்தை காக்க முடியும் என  தெரிவித்திருந்தனர்.

மூன்றாவது நாளான இன்றும்  இக்கண்காட்சியை அதிகளவான தாயக மக்கள் ஆர்வத்தோடு மாலை நேரத்தில்  பார்வையிடுவதோடு  பனை வள உற்பத்தி பொருட்களையும் அதிகளவில் வாங்கி செல்கின்றார்கள்.

தொடர்ந்து இக்கண்காட்சியும் விற்பனையும்  எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.












Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.