Breaking News
recent

சவால்களை வெற்றி கொண்டு அனைவரும் ஒன்றாக பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் - பிரதமர்


சவால்களை வெற்றி கொண்டு அனைவரும் ஒன்றாக பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டிய அவசியத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (22)  இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த போதிலும், 2015 ஆம் ஆண்டின் பின்னரே நட்புறவும் ஒருமைப்பாடும் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனினும் வடபகுதி மக்களுக்கு மேலும் பல பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகளுக்கு என்ன நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தென்பகுதி மக்கள் மத்தியில் எல்ரிரிஈ அமைப்பு மீண்டும் தலைதூக்கி விடும் என்ற அச்சம் காணப்படுகிறது. எனினும் அந்த அமைப்பு மீண்டும் தலைதூக்காது என்பது தமது நம்பிக்கையாகும் என பிரதமர் தெரிவித்தார்.

எல்ரிரிஈ அமைப்பு மீண்டும் தலைதூக்கி இருப்பதாக எடுத்தியம்புவதற்கு சில பத்திரிகைகள் மேற்கொள்ளும் முயற்சி குறித்தும் பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார்.

அன்று அடிப்படைவாதிகள் வெற்றியடைந்து நாட்டை தோற்கடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.