Breaking News
recent

ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்...!!!

(- தங்கராசா ஷாமிலன்.)

ஆனைக்கோட்டை மூத்தநயினார்  கோவில் பிள்ளையார் புதிய தேர் வெள்ளோட்டம்   ஆலய மகோற்சவத்தின் 12ம் நாளான  நேற்று திங்கட்கிழமை (09-07-2018) மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.


இதனை முன்னிட்டு நேற்று மாலை பழைய தேருக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அதனையொட்டி நேற்று மாலை மகாகணபதி பூஜை, புண்ணியாக வாசனம், மகா கணபதி ஹோமம், புதிய தேரில் யந்திரஸ்தாபனம், மகாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள், பொங்கல் என்பன செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மூத்தவிநாயகர் கோவில் வழியாக தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதற்க்கான ஏற்ப்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் திருத்தேர் வெள்ளோட்டத்திற்க்கு பொதுப்பணித்துறை, காவல்துறை, ஒத்துழைப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.









Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.