Breaking News
recent

காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்வதை அறிந்து யுவதி தற்கொலை


காதலன் பிறிதொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறியமையால், தவறான முடிவு எடுத்து இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 21 வயது இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக யாழ்ப்பாண மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இளம்பெண் நீண்டகாலமாக இளைஞன் ஒருவனைக் காதலித்ததாகவும், அவர் பிறிதொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.


இதனைத் தாங்க முடியாமல் இளம்பெண் தவறான முடிவு எடுத்துள்ளார். சங்கானை வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


சிகிச்சை பயனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்ததாக இறப்பு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.