Breaking News
recent

விஜயகலாவின் கூற்று தொடர்பில் நீதிமன்றம் குற்ற தடுப்பு பிரிவிற்கு அதிரடி உத்தரவு



விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பில் ராவணா பலய அமைப்பின் மாகல்கந்தே சுதந்த தேரரினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவினர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவினரால் கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அடங்கிய தமிழ் மொழியிலான ஒலி/ ஔி பதிவின் சிங்க மொழிப் பெயர்ப்பை திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு வழங்குமாறு அரச கருமமொழிகள் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பிலான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவிற்கும் பிரதம நீதவான் அறிவித்தல் விடுத்துள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.