Breaking News
recent

சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலை - திரும்பி கூட பார்க்காத விஜயகலா மகேஸ்வரன் ? அனந்தி சசிதரன் !

சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் நேற்று முன்தினம்  (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து  நேற்று  பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து சடலம் சுழிபுரம் - திருவடிநிலை மயானத்தில் புதைக்கப்பட்டது. 

இறுதிக் கிரியைகளில் பிரதேச மக்கள், காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வெண்கரம் ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், காட்டுப்புலம் - பாண்டவெட்டை சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை மாணவியின் கொலைக்கு பின்னர் இறுதி நிகழ்வில் கூட மத்திய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதும் இதுவரை அங்கு சென்று ஆறுதல் தெரிவிக்கவோ பார்வையிடவோ செல்லவில்லை ஊர்மக்கள் குற்றச்சாட்டினர். (சி)
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.