Breaking News
recent

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்பட வேண்டும் : தீர்மானம்.

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு இன்றைய தினம் (26) இடம்பெற்றது. 

இதில், முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்பட வேண்டுமென கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தீர்மானம் ஒன்றினை கொண்டுவந்தார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில். 

முள்ளியவளைப்பகுதியில் அமைந்திருந்த மாவீரர் துயிலுமில்லக் காணி, 2009ற்கு பிற்பாடு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்து. மேலும் இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணியில் துயிலுமில்ல அடையாளங்கள் அழிக்கப்பட்டு, இராணுவத்தினரால் பாரிய ஒரு இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையிலையே லோகேஸ்வரனால் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையில் குறித்த காணி இராணுவத்திடமிருந்து விடுவித்துத் தரப்படவேண்டும். என்ற தீர்மானத்தினை கொண்டுவந்துள்ளார். 

அத்தோடு மாவீரர் துயிலுமில்லக் காணியுடன், அதனோடு இணைந்த சிறுவர் பூங்கா மற்றும் பிரதேசசபைக்கு சொந்தமான காணிகளும் விடுவிக்கவேண்டும் என்று லோகேஸ்வரன் தெரிவித்தார். 

(ஞா.பிரகாஸ்)
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.