Breaking News
recent

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாகாண கல்வியமைச்சின் அதிரடி நடவடிக்கை !



யாழ். சுழிபுரம் சிறுமி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலையின் எதிரொலியாக, எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வடமாகாணக் கல்வி அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


”ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த இக்கதியானது மிகுந்த அதிர்ச்சியையும், கலலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாதிருக்க தங்கள் பிள்ளைகள் குறித்து பெற்றோர் கூடுதல் கவனத்துடன் செயற்படுவது அவசியமானதாகும்.

சிறுவர்கள் எதிர்நோக்கும் இவ்வாறான ஆபத்துக்களை எதிர்காலத்தில் குறைக்கக் கூடிய வகையில் வடமாகாணக் கல்வி அமைச்சு தனது வரையறைக்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது


அதன்படி, வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களினால் அங்கீகரிக்கப்பட்டவர்களால் பிள்ளைகள் அழைத்து செல்லப்பட வேண்டும் என நடைமுறையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளோம். இது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நடைமுறையாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.

இதேவேளை, இப்படுகொலை தொடர்பில், பொலிஸார் நடுநிலையுடன் செயற்பட்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் கடமையைக் கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

இக்குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நடைபெறாதிருக்க ஒரு பாடமாக அமைய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி படுகொலை தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன்  நேற்று  (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.