Breaking News
recent

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - பொலிஸார் திசை திருப்புகின்றனர்!!!

யாழ். மல்லாகத்தில் நேற்று முன் தினம் இரவு  பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சம்பவத்தை மூடிமறைக்கும் வகையில் பொலிஸார் செயற்படுவதாக அந்தப் பகுதி இளைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
"இரு குழுக்களுக்கு இடையிலான வாள்வெட்டைத் தடுக்கச் சென்றபோது, பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் அதன் காரணமாகவே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். நீதிவானுக்கும் அவ்வாறே தெரிவித்துள்ளனர்.
ஆனால், உண்மை அதுவல்ல. பொலிஸார் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார், தான்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினேன் என்பதை துணிவாக அங்கு சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்பவம் நடைபெறும்போது, சுன்னாகம் பொலிஸார் துப்பாக்கியால் சுடவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
வாள்வெட்டுக் குழுவினர் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மாத்திரம் ஆரம்பத்தில் அங்கு இருந்தது. நீதவானுக்கு காண்பிக்கும்போது, அந்த மோட்டார் சைக்கிளுடன் இரும்புக் கம்பியையும் காண்பித்தனர். பொலிஸார் விடயங்களைத் திசை திருப்புவதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம்" - என்றார்கள்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.