Breaking News
recent

சிறுத்தையைக் கொலைசெய்த குற்றச்சாட்டு - இருவருக்கு விளக்கமறியல்


சிறுத்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இன்று (24) கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் இன்று (24) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சிறுத்தையை கொலை செய்த ஏனைய நபர்களையும் கைது செய்யமாறு பொலிஸாரிற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் நேற்று (23) இரவு அம்பாள்குளம் பகுதியில் வைத்து 42 வயதுடைய ஒருவரை கைது செய்தனர் இன்று (24) காலை உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய மற்றுமொருவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.