Breaking News
recent

மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கங்கள்



சில பிரதான தொழிற்சங்கங்களுடன் இணைந்து, ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கங்களின் முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற இடத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தினரால் தொடர் சத்தியாக்கிரக பேராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதற்கு தேசிய தொழிற்சங்கங்கள் மத்திய நிலையமும் இன்று முதல் தமது ஆதரவை வழங்கியுள்ளது.

இந்நிலையிலேயே எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.