Breaking News
recent

யாழில் நாற்பது பேருக்கு வலை வீசியுள்ள பொலிஸ்!



யாழ். மல்லாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கு முன்னர் நடந்தது என்று கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் சுமார் 40 பேர் கைதுசெய்யப்படவுள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

மல்லாகம், சகாயமாதா ஆலயத்துக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் இளைஞரொருவர் உயிரிழந்தார். சூட்டுச் சம்பவத்துக்கு முன்னர் குழு மோதல் நடந்தது என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மல்லாகம் நீதவானின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிப்பதற்குப் பொலிஸார் மறுத்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 பேர் வரையில் கைதுசெய்யப்படவுள்ளனர் என்றும், அவர்கள் கைதுசெய்யப்படும்வரை சந்தேநபர்களை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்றும் பொலிஸார் கோரினர். அதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.