Breaking News
recent

போக்குவரத்துப் பொலிஸாரின் பணப்பையில் ரூபா 400 மட்டுமே இருக்க முடியும் புதிய கட்டுப்பாடு வருகிறது


வீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபா பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாட்டை பொலிஸ் தலைமையகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இலஞ்சம் பெறுவறுதைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையக தகவலை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடமைக்குச் செல்வதற்கு செல்ல முன்னர் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் தமது பணப்பையை பொறுப்பதிகாரியிடம் காண்பித்துச் செல்லவேண்டும்.

மேலும் பொலிஸ் நடமாடும் பிரிவிரினர், வீதிக் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிஸாரின் பணப்பையை சோதனையிடுவதற்கும் புதிய நடைமுறையில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை வடக்கு பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.


இதேவேளை, வீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 300 ரூபா பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையிலுள்ளது. அதுதொடர்பில் அலுவலகப் பதிவேட்டில் கடமைக்குச் செல்லும் அலுவலகரே பதிவிட்டுச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.