Breaking News
recent

சமூக அமைப்புகள் தன் நிலை குறித்து சற்றும் சிந்தித்து பார்க்க வில்லை (கிளி.வாழ் பெண்மணி விஜயராணி மனகலக்கம்)

(- தங்கராசா ஷாமிலன்.)

ஈழ விடுதலைப்போராட்டத்தின்  கோர இறுதி யுத்தத்தின் போது தனது கணவனை  இழந்த இன்பநாதன் விஜயராணி வயது (49) மிகவும் வறுமைப்பட்ட நிலையில் எந்தவித பொருளாதார வசதியின்றி கிளிநொச்சி ஆனந்த புரம் கிழக்கில் வசித்து வருகின்றார்.

2009 ம் ஆண்டு  ஈழபோராட்ட   இறுதி யுத்தத்தில் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து புது மாத்தளனில் குடியிருந்தபோது  (05-04-2009)  செல் பட்டு இரத்தம் சிந்த சிந்த  தனது  கணவனை பறிகொடுத்திருந்தார் .  பல இன்னல்களை  சந்தித்து  2010 மீண்டும்   மீள் குடியேற்றத்தில் சொந்த இடத்திற்கு  மீள் குடியேறியிருந்தார்.


மனித நேயம்  கொண்டவர்களே உதவுங்கள்  பொருளாதார பிரச்சனையை தீர்க்க என  பல தடவைகள்  ஊடகங்கள்  சமூக அமைப்புகள்  அரசியல் பிரமூகர்கள் என பலரிடம்   கோரிக்கை வைத்திருந்த போதும் எந்த வொரு உதவிகளும் சரியாக  கிடைக்கவில்லை என  மனக்கலக்கத்தோடு தெரிவித்தார்.


பெண்மணி கருத்து  தெரிவிக்கையில்...


தற்போது சொந்த ஊரில் எந்த  பொருளாதார  உதவிகளுமின்றி தனிமையில்  வாழ்ந்து வரு கின்றேன்.  2015  தொடக்கம்   2017 வரை எனது  இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  இலவசமாக சிறுநீரகம் மாற்றப்பட்டு  கண்டியில் சிகிச்சை  மேற்கொண்டு வந்தேன். 

எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை. அதில் ஆண் பிள்ளை மாற்றுத் திறனாளி.   பணம்  இல்லாத காரணத்தால் எனது தேவைகளை  பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் இருந்தது.  கடவுளின் கிருபையால் தான் எனக்கு சிறுநீரகம்  இலவசமாக மாற்றப்பட்டது.  அதன் பிற்பாடு நிறைய தேவைகள் இருந்தது  மருந்துகள் சாப்பாடுகள்  உழைப்பதற்கு யாருமே இல்லை   இரண்டு பிள்ளைகள்  அவர்கள் கல்யாணம் செய்துவிட்டார்கள்  அவர்கள் தங்களுடைய குடும்பத்தை தான் பார்க்கிறார்கள்.  என்னை பார்க்கிறது என்று இல்லை  அவர்களும் சிறியதோரு வருமானத்தை ஈட்டுபவர்கள்  அதனால் எனக்கு உதவி செய்யக்கோரி பல நிறுவனங்களிடம் கேட்டிருந்தனான். எனக்கு யாரும்   உதவ  முன்வரவில்லை   என்னுடைய விபரங்களை நிறைய பேர் வாங்கியிருந்தனர். அப்படி வாங்கியும் கடைசியில் ஏமாற்றத்தை தான் சந்தித்தது  சில பேர் செய்வதாக கூறியிருக்கின்றார்கள்.  2017 ம் ஆண்டு காலப்பகுதியில்  ஈழ மக்கள்  ஜனநாயக கட்சியின் செயலாளர் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா  சிறுதொகை பணத்தை வழங்கியதாகவும்   தனது நிலை குறித்து கடித்தின் முலம்  தெரிவித்திருந்த போதும்   வேறு  ஒரு அரசியல் பிரமூகர்கள்  உதவி செய்ய வரவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

கண்டிக்கு செல்லும் போது  ஆடை  வாங்க கூட  பணம் இல்லாத காரணத்தினால்  முகநூலில் பிச்சை  எடுத்தேன்  தற்போதும் எனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து பிச்சை எடுக்கின்றேன். ஊடகங்களும் சமூக அமைப்புக்களும்  அரசியல் கட்சிகளும்   எனக்கு  மனவருத்தத்தை தான் ஏற்படுத்தி இருக்கின்றது . 

அரசியல் பிரமூகர்கள்  தேர்தல் காலத்தின் போது வீடு தேடி வருகின்றார்கள் அதன் பிற்பாடு அவர்களுக்கு எங்களையும் எங்கள் பிரச்சனை குறித்து அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை யாரை நல்லவர்கள் என்று நம்புவது எல்லோரும் தங்கள் தேவைக்கு தான் வருகின்றார்கள்   எனவும்  மக்களை பற்றி சற்றும் சிந்திப்பதில்லை  மனித நேயம் கொண்டவர்களால் தான் நான் தற்போது சாப்பிட்டு வருகின்றேன்.  பொருளாதாரத்தை மேம்படுத்த  மனிதநேயம் கொண்டவர்கள் உதவ முன்வாருங்கள் என கோரிக்கைவிடுக்கின்றேன் . 

கிளிநொச்சி வாழ் பெண்மணி  2015ம் ஆண்டிலிருந்து  தொடர்ந்து  இன்று வரை  கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளார்.

 









Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.