Breaking News
recent

கல்வியங்காடு செங்குந்தா சந்தையின் புனரமைப்பு பணிகள் தற்போது துரிதகதியில் ....!


- எஸ்.நிரூஜன் 


கல்வியங்காடு செங்குந்தா சந்தையின் புனரமைப்பு பணிகள் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் சந்தை கட்டடத்தின் பின்புறமாகவுள்ள மரக்கறி சந்தை, மீன் சந்தை தொகுதி என்பன யாழ்.மாநகர சபையால் புனரமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பழங்கள் விற்பனை தொகுதியொன்றும் அமைக்கப்படுவதுடன் மீன் சந்தை ஒரு மாடிக் கட்டடத் தொகுதியுடன் அமைக்கப்படுவதுடன் இங்கு இறைச்சி விற்பனைக்கான பகுதியாகவும் அமைக்கப்படுகின்றன.

தற்போது மரக்கறி சந்தை தொகுதி, பழக் கடை சந்தை தொகுதியும் அமைக்கப்பட்டு முடிந்து்ள்ளதுடன் மீன்சந்தை கட்டத் தொகுதியில் வேலைகள் இடம்பெற்று வருகிறது.


இதேவேளை 2006 ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை ஆணையாளராக சி.வி.கே.சிவஞானம் கடமையாற்றிய போது புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் யுத்தம் சூழ்நிலை காரணமாக புனரமைப்பு பணிகள் இடம்பெறவில்லை. இந்நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற நிலையில் கடந்த ஆண்டு (2017) ஒக்டோபர் மாதம் மீள வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.