Breaking News
recent

யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஊடக பணிப்பாளர் மீது தாக்குதல்: சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்திலுள்ள தனியா் தொலைக்காட்சி ஊடக பணிப்பாளர் மீது நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

தனியார் தொலைக்காட்சியின் ஊடக பணிப்பாளர் மீது அலுவலகத்திற்குள் வைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தாக்குதல் சம்வத்திற்ககான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.