Breaking News
recent

யாழ் மாநகரசபை முன்னாள் உறுப்பினர் விஜயகாந் திருட்டுக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 119 பவுண் திருட்டு யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 119 பவுண் திருட்டு  நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக இனங்கண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,


கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகை சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டது. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விஜயகாந் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 119 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸாரால் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது.

“சந்தேகநபர்கள் நால்வர் மீதான திருட்டுக் குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. சந்தேகநபர்கள் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. நான்கு குற்றவாளிகளுக்குமான தண்டனைத் தீர்ப்பு வரும் பெப்ரவரி முதலாம் திகதி வழங்கப்படும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அவரை தமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி கட்சி நீக்கியது. அதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவரது கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

www.newjaffna.com -news
web thank you...
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.