Breaking News
recent

வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று மாகாணம் தழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குபட்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் வவுனியா நகர சபை செயலாளர் மற்றும் பொலிஸார் இணைந்து பழைய பஸ் தரிப்பிடத்தை மூடுமாறும் வடமாகாண முதல்வர் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பழைய பஸ் நிலையத்தை சூழவுள்ள வர்த்தகர்களும் கடைகளை மூடி தமது எதிர்ப்பை வௌியிட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் பயணிகளின் நலன் கருதி பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கான இலவச பஸ் சேவைகளை தனியார் பஸ் வண்டிகள் முன்னெடுத்துள்ளன.
வடமாகாணத்திற்கான அனைத்து சேவைகளையும் அதிகரித்திருப்பதாகவும், எவ்வித தடங்களும் இன்றி போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தனியார் பஸ் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.