Breaking News
recent

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது



இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த 3 நாட்களாக வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவையை முன்னெடுக்குமாறு முதலமைச்சர் பணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.