Breaking News
recent

பளையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம் ...!

யாழ். பளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

யாழ். பளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்ற 37 வயதுடைய நபரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்திற்கு இலக்கான நபரின் உடல் முழுதும் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் குறித்து தடையப்பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.