Breaking News
recent

பிணை முறி மோசடிகள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம்: ரவி கருணாநாயக்க

பிணை முறி மோசடிகள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை பொய்யானது.இந்த சம்பவத்துடன் எனக்கோ பிரதமருக்கோ தொடர்பு உண்டு என எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.எங்களை இலக்கு வைத்து சிலர் சேறு பூசி வருகின்றனர். இவ்வாறான சேறு பூசல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.ஆணைக்குழுவின் மெய்யான அறிக்கையை நாம் கோரியுள்ளோம்.அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், அதுவரையில் இந்த விடயம் குறித்து நாம் பேசப் போவதில்லை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.