Breaking News
recent

முறிகள் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை பிறிதொரு தினத்தில் நடத்தத் தீர்மானம்

முறிகள் கொடுக்கல் வாங்கல் விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்காமல் நாளைய தினம் பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் பயனில்லை என அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனால் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை பிறிதொரு தினத்தில் நடத்த கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முறிகள் விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் பாராளுமன்றத்தினைக் கூட்டுமாறு பிரதமர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.