Breaking News
recent

முறிகள் திருடர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியும் – சுசில் பிரேமஜயந்த

முறிகள் மோசடி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, குற்றவியல் வழக்கு சட்டத்தின் கீழ், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் செயற்பட முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

அறிக்கையில் கையெழுத்திற்கு முன்னாலுள்ள ஒரு பக்கமேனும் குறைவடையவில்லை. எத்தனை பக்கங்கள் உள்ளன என நான் கணக்கிட்டுக் கூறினேன். இதில் 1152 பக்கங்கள் காணப்படுகின்றன. உள்ளடக்கங்களின் 3/2/7 ஆகிய அனைத்து பக்கங்களையும் கணக்கிடுகின்றபோது அந்த எண்ணிக்கை கிடைக்கும். அந்த உள்ளடக்கம் தேவையாயின் அவற்றை பாராளுமன்றத்தினால் பெற்றுக்கொள்ள முடியும். கோப் குழுவினாலும் அதனைப் பெற முடியும். சாட்சியாளர்களுக்கே அது சாதகமானது. சாட்சியாளர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவதற்கான தேவை இருக்குமாயின் அவ்வாறு கூற முடியும்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.