Breaking News
recent

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி நகர சபை வேட்பாளர் மீது தாக்குதல்

சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரசார நடவடிக்கையின் போது இன்று காலை அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினரான காசிலிங்கம் சற்குணதேவன் என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என சாவகச்சேரி பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 308 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
நேற்று மாத்திரம் 25 முறைப்பாடுகள் பதிவாகியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
சட்டவிரோத பிரசாரம் மற்றும் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகள் பிரிவில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அந்த முறைப்பாடுகள் தொடர்பில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.