Breaking News
recent

ஈ.பி.டி.பி கோட்டை தீவகத்தில் பலத்த மக்கள் ஆதரவு பெற்று வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி !

(தேர்தல் கள  பிராந்திய செய்தியாளர் - திருச்செல்வன்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி மக்கள் பிரதேசத்தில் காணப்படும் பல்வேறு குறைகள் பற்றி கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்றை (20-01- 2018) நேற்று சனிக்கிழமை வேலணை பிரதேசத்தில் மேற்கொண்டிருந்தது .

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் வழி நடத்தலில் வேலணை பிரதேச முதன்மை வேட்பாளராக போட்டியிடும் புலேந்திரன் கஜன் மக்களிடம் நேரடியாக சென்று கடந்த காலத்தில் மக்கள் எதிர் கொண்டிருந்த வாழ்வாதார அடிப்படைப்பிரச்சனைகள் குறித்து விசேட கவனம் செலுத்தி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடிலில் வேலணைப்பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் ...!

கடந்த தேர்தல் காலங்களில் எங்களை தேடிவந்த அரசியல் வாதிகள் அதன் பிற்பாடு எங்களை திரும்பி பார்க்க வில்லை எனவும் எங்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்க படவில்லை எனவும் தமிழ் மக்களை வழி நடத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தங்களின் விடயத்தில் உரிய தீர்வுகளை தரவில்லை எனவும் அரசாங்கத்தோடு ஒன்றினைந்து செயற்படும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கொள்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரானவை என சுட்டி காட்டியிருந்தனர்.

எங்கள் பிரச்சனைக்கு உரிய தீர்வு தருவார்கள் என நம்பி வாக்களித்த நாங்கள் பல்வேறு பட்ட பிரச்சனைகளில் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றோம் நிச்சயம் எதிர் வருங்காலங்களில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவோம் மேலும் இனிவரும் காலங்களில் மக்களுக்கு நேர்த்தியான முறையில் சேவையாற்றக்கூடிய மக்களுக்காக குரல் கொடுக்க கூடிய இளைஞர்களை களமிறக்குமாறும் எதிர்காலம் பொருளாதார ரீதியாகவும் பிரதேச ரீதியாக முன்னேற்றமடைய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டையாக காணப்பட்ட தீவகம் தற்போது தவிடு போடியாகப்பட்டு வருகின்றது.



Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.