Breaking News
recent

ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்? விளக்கமறியல்



ஆபத்தை விளைவிக்கும் ஆயதங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புளொட் அமைப்பினது முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீடொன்றில் பழைய புளொட் அலுவலகம் இருந்தது.அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால், அந்த வீட்டில் இருந்த உறுப்பினர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றின் கட்டளையின் பிரகாரம் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் சென்று வீட்டில் இருந்த பொருட்களை வெளியேற்றும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்போது அலுமாரி ஒன்றுக்குள் பாவனைக்கு உட்படுத்தக் கூடிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயதங்கள் காணப்பட்டுள்ளன. இதன்போது அவற்றை பொலிஸார் மீட்டுள்ளதுடன், அந்த வீட்டில் தங்கிருந்த நபரையும் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் சார்பில் கடந்த தவணையின் போது மன்றில் முன்னிலையான பெரும்பாண்மையின சட்டத்தரணி மன்றில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.அதனால், சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.