Breaking News
recent

தேர்­த­லில் எதி­ர­ணியை விமர்­சிக்­கா­தீர்­கள்- ரவி கரு­ணா­நா­யக்க

தேர்­தல் பரப்­பு­ரை­யின்­போது எதி­ர­ணியை விமர்­சிக்­க­ வேண்­டாம். கட்­சி­யின் எதிர்­கால வேலை­களை மாத்­தி­ரம் மக்­கள் முன்­கொண்டு செல்­லுங்­கள். இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உப தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­தார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் கொழும்பு மாநா­கர சபை­யில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­க­ளு­டன் சந்­திப்பு நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பரப்­பு­ரை­யின்­போது எதி­ர­ணி­யையோ தனி­ந­பர்­க­ளையோ விமர்­சிக்­கா­மல் ஐக்­கிய தேசிய கட்­சி­யின் எதிர்­கால வேலைத்­திட்­டங்­களை மக்­கள் முன் கொண்­டு­செல்ல வேண்­டும். ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு என்று மக்­கள் மத்­தி­யில் தனிப்­பட்ட மரி­யாதை, மதிப்பு இருக்­கின்­றது. கட்­சி­யின் மதிப்பு பாது­காக்­கப்­ப­டும் வகை­யில் செயற்­ப­ட­வேண்­டும்.

மக்­க­ளுக்கு இன்று அர­சி­யல் வெறுப்­பா­கி­யி­ருக்­கின்­றது. தனிக் கட்சி என்ற வகை­யில் ஐக்­கிய தேசிய கட்சி தொடர்­பில் மக்­கள் பெரும் நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­ற­னர். ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சி­யில் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் உறு­தி­ய­டை­யும் என்­பது மக்­க­ளின் பொது­வான நம்­பிக்­கை­யா­கும். மக்­க­ளின் நம்­பிக்­கைக்கு அமை­வாக எமது நட­வ­டிக்­கை­களை நாங்­கள் மேற்­கொள்­ள­வேண்­டும்.2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்­கிய தேசி­யக் கட்சி நாட்­டின் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொண்­டது. நாங்­கள் கிரா­மத்­தின் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­ள­வேண்­டும். கட்சி என்ற வகை­யில் எங்­க­ளி­டம் தவ­று­கள் இருக்­க­லாம். அவற்றைச் சரி செய்­து­கொண்டு முன்­னுக்­குச் செல்­ல­வேண்­டும்.தேர்­தல் பரப்­பு­ரை­க­ளின்­போது எங்­க­ளுக்கு சேறு பூசும்­வ­கை­யில் பரப்­பு­ரை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­லாம். அவற்றை உறு­தி­யாக இருந்து சமா­ளிக்­க­வேண்­டும் என்­றார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.