Breaking News
recent

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கண்ணீரில் வேர் ஊன்றிய தமிழ் அரசியல் கட்சிகள்

ஈழத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் போராட்டம் தொடங்குகின்றோம், தீர்வைப் பெற்றுத்தருகின்றோம் என்று வெற்றுக்கோசங்களை எழுப்பி மக்களை வீதிக்கு கொண்டுவந்துவிட்டு தாங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

எதிர்ப்பு அரசியல், இனப்பிரச்சினைக்கு தீர்வு,வடகிழக்கு இணைப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடிவு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம், என்று பொய் வாக்குறுதிகளை வழங்கி பாராளுமன்றபாராளுமன்றம் சென்றவர்கள் இதற்கான பிரேரணைகளை கொண்டு வந்தார்களா? இல்லை. 

மாகாண சபையைத்தாருங்கள் ஆள்கின்றோம் என்றார்கள் வழங்கப்பட்டது. இன்று என்ன நடந்தது? 

அதிகாரப்போட்டி, பதவி ஆசை மாகாண சபை நடு வீதியில் உள்ளது.

 
எந்த அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கும், கேள்வி கேட்கும் அதிகாரமும் உரிமையும் மக்களுக்கு இருக்கின்றது. 

மக்களுக்கான எந்த தீர்வை பெற்றுக்கொடுத்தார்கள். 300 நாட்களை கடந்து நடத்தப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டிய போராட்டத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் களத்தில் நின்றன. தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிய போது மக்கள் நம்பிக்கை வைத்தே வாக்களித்தனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பாராளுமன்ற பதவியை துறந்து இருக்க வேண்டும். 


ஈழத்தில் அரசியல் செய்ய இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு,காணாமல் ஆக்கப்பட்டோர், போர்க்குற்றம் , வடகிழக்கு இணைப்பு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் ஆகியன தேவை. எனவே எந்த அரசியல் கட்சியும் இதற்கான தீர்வை பெற்றுத்தரப்போவதில்லை.இந்த விடயங்களிலையே தமிழ் கட்சிகளின் வேர்கள் ஊன்றி இருப்பதால் அதை அவர்கள் தமக்கு எப்பொழுதும் சாதகமாகவே பயன்படுத்துவார்கள். 

ஒவ்வொரு தமிழ் குடிமகனும் ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம். மாற்றத்துக்கான புதிய வழி முறைகளை தேர்ந்து எடுக்க வேண்டும். எமக்கான தீர்வை மக்கள் எழுச்சி மூலமே பெற முடியும். 


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.