Breaking News
recent

யாழ்ப்பாணத்தில் 3 வயது சிறுமி வாள்வெட்டுத் தாக்குதலில் உயிரிழப்பு: தாக்கியவர் தற்கொலை

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுமியின் பாட்டி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறே வாள்வெட்டு தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
தாயையும் சகோதரரின் புதல்வியையும் வாளால் தாக்கிய சந்தேகநபர், நஞ்சறுந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபரின் 55 வயதான தாயும் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.