Breaking News
recent

டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்ல முயற்சி: பெண் ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆறு குற்றச்சாட்டுக்களில் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு போதுமான சாட்சியம் இல்லை என மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொலை முயற்சிக்கு உதவிபுரிந்தமை தொடர்பில் குறித்த சந்தேகநபரான பெண்ணுக்கு 15 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது தற்கொலைதாரிக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.