Breaking News
recent

இதுவரை 191 முறைப்பாடுகள் பதிவு - 10 வேட்பாளர்கள் கைது

இந்தமுறை உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 191 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய இதுவரையில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுள் 10 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அச்சுறுத்தல், தேர்தல் சட்டங்களை மீறல் உள்ளிட்டவைகள் உள்ளடங்குவதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் தேர்தல் சட்டத்தை மீறிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்களிடம் இருந்து 27 சுவரொட்டிகளையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.