Breaking News
recent

11 இளைஞர்கள் கடத்தல்: கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு விளக்கமறியல்

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த சந்தேகநபர் திருகோணமலை கடற்படை முகாமில் சேவையாற்றியுள்ளார்.
இதேவேளை, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் பிரசாரங்களை முன்னெடுப்பதை தடுக்குமாறு தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்னவிற்கு கோட்டை நீதவானால் இன்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட 6 கடற்படை உறுப்பினர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.