Breaking News
recent

தெல்லிப்பளை மாவிட்டபுரம் தெற்கு பகுதியில் பாவனையற்ற மலசலகூட குழியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்பு!photos

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாவிட்டபுரம் தெற்கு பகுதியில் பாவனையற்ற மலசலகூட குழியில் இருந்து வெடிக்காத நிலையில் பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மீட்பு நடவடிக்கை இன்று(09) இடம்பெற்றதாக   செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….



வீட்டின் உரிமையாளர்கள் பாவனையற்ற மலசல கூட குழியினை புனரமைக்க முற்பட்ட போது அந்தக்குழியில் சில வெடி பொருட்களை அவதானித்துள்ளார். உடனடியாக சொண்ட் நிறுவனத்திற்கு அறிவித்தல் வழங்கியதை அடுத்து அவர்கள் ஊடாக ஹெலோற்றஸ் (Halo-trust) பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மலசலகூட குழியில் இருந்து வெடிக்காத நிலையிலுள்ள 90 குண்டுகள் மீட்கப்பட்டதுடன், மேலும் பல வெடி பொருட்கள் அப்பகுதியில் காணப்படுவதால் வெடிபொருட்கள் அகற்றும் நடவடிக்கை நாளையும் தொடரும் என Halo-trust பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.