Breaking News
recent

முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரன் கொலை: குற்றவாளியின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் கொலை வழக்கின் குற்றவாளியால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான தேவிகா தென்னகோன் மற்றும் எஸ்.துறைராஜா ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து, தம்மை விடுதலை செய்யுமாறும், மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்யுமாறும் கோரி குற்றவாளியால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் மற்றும் அவரின் பாதுகாவலர் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேகநபரான ஜோன்ஸ்டன் கொலின் வலன்ஸ்டினோ என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மரண தண்டனை விதித்திருந்தது.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பில் வைத்து முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனும் அவரது பாதுகாவலரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணகளை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், நான்கு வருடங்களின் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.