Breaking News
recent

இளைஞன் கொலை: தந்தைக்கும் மகனுக்கும் விளக்கமறியல்



மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இருவரையும், ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பெரியகல்லாறு ஊர் வீதியிலுள்ள அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக் குத்தாக மாறியதில் பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியைச் சேர்ந்த ஜேசுதாசன் தமேசன் (23 வயது) என்னும் இளைஞர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தில் தந்தை மற்றும் மகனை களுவாஞ்சிகுடி பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.