Breaking News
recent

இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன விபத்து தொடர்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன அனுமதிப் பத்திரத்தை மீள கையளிப்பதற்காக 5,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.
பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மூவாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றபோதே நேற்று (14) பிற்பகல் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.
பாடசாலை அதிபர்கள், தொழில் திணைக்கள உயரதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.