Breaking News
recent

பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவிப்பு



சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடும் ரயில்களின் எண்ணிக்கை 350 ற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இன்று 10 ரயில்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டன.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள போதும், அதனைக் கவனத்திற்கொள்ளாது பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் சேவையை விட்டு இடைவிலகியவர்களாகக் கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுபெறும் வரையும், தனியார் பஸ்கள் வீதி அனுமதிப்பத்திமின்றி அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.







Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.