Breaking News
recent

ஜனாதிபதி தமக்கு அழைப்பு விடுத்தமை ஓர் நல்லெண்ண சமிக்ஞை - டக்ளஸ்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு அழைப்பு விடுத்தமை ஓர் நல்லெண்ண சமிக்ஞையே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட அழைப்பை ஏற்று இன்று குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னரே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தலில் தனித்துவமாக வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம்.

இந்தநிலையிலும் தமது நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமையானது 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்ற தமது அரசியல் இலக்கை ஜனாதிபதி புரிந்து கொண்டதன் வெளிப்பாடேயாகும் எனவும் டக்ளஸ் தேவாநந்தா குறிப்பிட்டுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.