Breaking News
recent

யாழில் கொள்ளைக் கும்பலை சேர்ந்த ஒருவர் கைது! வாள் ஒன்றும் மீட்பு



யாழில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து வாள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளைக்கும்பலை சேர்ந்த ஐவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டை, சங்கானைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் இரவு நேரங்களில் வாள்களுடன் நடமாடி திரிந்த குழுவினரை, அந்தப் பகுதியை சேரந்த இளைஞர்கள் சிலர் துரத்திச் சென்ற நிலையில், ஒருவர் அவர்களிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஏனையவர்கள் தப்பிச் சென்ற நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வந்த பொலிஸார சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.