Breaking News
recent

பதிலடி கொடுக்குமா இலங்கை அணி?


இந்தியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் இரண்டாவது ரி–20 ஆட்டத்தில் இலங்கை அணி, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற் பட்டுள்ளது.

இலங்கை அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக முடிவடைந்த டெஸ்ட் தொடரை 1:0 என்ற அடிப் படையிலும், ஒருநாள் தொடரை 2:1 என்ற அடிப்படையிலும் இந்திய அணி கைப் பறியது.

ரி-–20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலாவது ரி–-20 ஆட்டத்தில் இந் திய அணி வெற்றிபெற்றது. இரண்டாவது ரி-–20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


இந்திய அணி தற்போது 1:0 என்று முன் னிலையில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திலும், இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணியால் கிண்ணத்தைக் கைப்பற்ற முடியும்.

இந்தப் பின்னணியில் இன்றைய ஆட்டத்தை வாழ்வா, சாவா நிலையில் எதிர்கொள்கிறது இலங்கை அணி.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.